வரலாற்று சிறப்புமிக்க ஒரு தரமான பட்ஜெட்டை மத்திய அரசு அறிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கீழ கருப்புகோடுப்பகுதியில் தமிழ்நாட்டின் முதல் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரான மறைந்த வேலாயுதத்தின் திருவுருவ சிலை அடங்கிய மணிமண்டபத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிலையை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நடுத்தர மக்களையும், முதலீட்டாளர்களையும், புதிதாக வணிகம் தொடங்கும் வணிகர்களையும் மனதில் வைத்துக்கொண்டு பட்ஜெட் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், மக்களுக்கு தேவையான தரமான பட்ஜெட்டை மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.