வருமான வரிச்சட்டம்-1961 மறு ஆய்வு செய்யப்படும் என பட்ஜெட் உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், வருமான வரிச்சட்டம் விரிவான முறையில் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும், இதன்மூலம் நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கையும், சச்சரவும் கணிசமாக குறையும் என்றும் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார். அந்த வகையில், ஆறு மாதத்தில் வருமான வரிச்சட்ட மறுஆய்வு பணி நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.