நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023-2024 -ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், கல்வி. சுகாதாரம், வேளாண்மை ஆகிய மூன்று துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
வேளாண்மைதுறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தும், அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி உழவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாற்றப்படுவார்கள் என்ற அறிவிப்பும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
தங்கம், வெள்ளி கடத்தலைத் தடுக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யவேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது என குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், ஆந்திரா, பீகாருக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிப்பதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எனவே, “தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும்” என ராதாஸ் வலியுறுத்தியுள்ளார்.