திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜர் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கிய கிருத்திகா அதை கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு கிருஷ்ணமூர்த்தி வீடு திரும்பியபோது மனைவி மற்றும் குழந்தைகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.