விதி எண் 267! - மாநிலங்களவைத் தலைவர் விளக்கம்!
Aug 31, 2026, 08:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விதி எண் 267! – மாநிலங்களவைத் தலைவர் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Jul 24, 2024, 01:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாநிலங்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என கூறி, இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.  பின்னர் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விதி எண் 267 குறித்த விளக்கம் அளித்தார்.

அப்போது பேசியவர்,

மாண்புமிகு உறுப்பினர்களே,  இந்த விளக்கம் விதி எண் 267 குறித்ததாகும்.  உங்களது நலனுக்காக, விதி எண் 267 குறித்த எனது விளக்கத்தை, உங்களது பார்வைக்காக இன்று பதிவேற்றம் செய்துள்ளேன். இதில், உங்களது கவனத்தைத் தீவிரமாக செலுத்துமாறு, உங்களை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துமாறு நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், ஏனெனில், இது அவையின் ஒவ்வொரு அமர்வின் போதும், தினசரி வழக்கத்தில் ஒன்றாக மாறியுள்ளது.

கடந்த 36 ஆண்டுகளில், இந்த நடைமுறை 6 நிகழ்வுகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். அரிதான சூழல்களில் மட்டுமே இந்த நடைமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது.

உங்களது நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரத்தை எடுத்துக் கொள்வதற்காக, அவை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோருவது, மிகவும் கவலைக்குரிய விவகாரம் என்பதை நான் வலியுறுத்தத் தேவையில்லை. நீங்கள் இன்று கொடுத்துள்ள நோட்டீஸ்கள், அவைத்தலைவரின் உத்தரவுக்கு ஏற்றதாக இல்லை என்பதால், அவற்றை அனுமதிக்கவில்லை.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில், விதி எண் 267, ஆறு நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர்களிடமிருந்து நாள்தோறும் இது போன்ற எண்ணற்ற கோரிக்கைகள் வருகிறது. இது ஒரு வழக்கமான நடைமுறையாகவும், பழக்கமாகவும் மாறியுள்ளது.

து ஒரு கேலிக்கூத்தான அம்சமாக, தனக்குத்தானே தரம் தாழ்ந்துள்ளது.  இது குறித்து நேற்று நான் மிகுந்த பொறுப்புடன் விளக்கம் அளித்த போதிலும், அது குறித்து யாரும் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை என்பதால், இதனை உங்களுக்கான இணையதளத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Rajya Sabha Speaker's explanation of rule number 267!
Share
Tweet
SendShare
Previous Post

பட்ஜெட்டை மக்களின் பார்வையில் அணுக வேண்டும்!- சுரேஷ் கோபி

Next Post

ஜோ பைடன் விலகல் டிரம்ப்புடன் மோதும் கமலா!

Related News

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies