சொமேட்டோ டெலிவரி வேலை செய்வது போல் நடித்து, போதைப் பொருட்கள் டெலிவரி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மாதாபூர் பகுதியில், உணவு டெலிவரி வேலை செய்யும் ஷேக் பிலால் என்பவர் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை பலருக்கும் சப்ளை செய்து வந்துள்ளார்.
ரகசிய தகவலின் பேரின், ஷேக் பிலாலை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 15 கிராம் போதை பொருள், 22 கிலோ கஞ்சா மற்றும் 71 நிட்டர்சன் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.