மதுரையில் தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கைகளை கட்டிப்போட்டு, ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏராளமான தனியார் பேருந்து நிறுவனங்கள் இயங்கி வருகின்றது. இங்கிருந்து பேருந்துகள் சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒரு தனியார் பேருந்தின் ஓட்டுநர் பயணிகளை ஒரு இடத்தில் ஏற்றி மற்றொரு இடத்தில் இறக்கியதாகவும், அதற்கான கட்டணத்தை நிறுவனத்திற்கு தராமல், மோசடி செய்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனால், ஆம்னி பேருந்து நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் கைகளை ஜன்னலில் கட்டி வைத்து தாக்கி விசாரணை நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.