“நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்லது” என்றும், “விஜய் போன்ற இளம் தலைவர்கள் அரசியலுக்கு வருவதால் நல்லது நடக்கும்” என்றும் நடிகை சாக்ஸி அகர்வால் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், கோவிலில் இருந்து வெளியே வந்த அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், போட்டிபோட்டு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சாக்ஸி அகர்வால், “நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவது வருத்தமாக இருக்கிறது” என்றும் கூறினார்.