கர்நாடகாவில் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழல் குறித்து விவாதிக்கக்கோரி, கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்திலேயே தங்கி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் ஊழல் புகாரில், கர்நாடாக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் அசோக், கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்திலேயே தூங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.