உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது அறிவாலய அரசு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
Feb 16, 2026, 07:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 18, 2026, 07:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் அறிவாலய அரசு ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என உருகி உருகி காணொளி வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் ரூ. 518 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை களைகட்டியிருப்பது சுவாரஸ்யமான நகை முரண் என தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சாராய வாடை இல்லாத கொண்டாட்டங்களே இல்லை என்று கூறுமளவிற்குப் பண்டிகை நேரங்களில் சாராய விற்பனையைப் பல மடங்குகளாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக் மாடல் அரசு என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிலும், குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு ரூ. 3000 கொடுக்கிறோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்தப் பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ள திமுக அரசின் அறிவாற்றலைப் பார்க்கையில், இதற்குப் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்ற நகைச்சுவை வசனம் தான் நினைவிற்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.

பொங்கலுக்கு கொடுத்த ரூபாய் நோட்டில் உள்ள எண்ணும், டாஸ்மாக்கில் வசூலாகியுள்ள நோட்டில் உள்ள எண்ணும் ஒத்துப்போகிறது என்று செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

மக்களின் மகிழ்ச்சியை விட, மக்களின் மன நிம்மதியை விட, போதையால் சமூகத்தில் நிகழும் அசம்பாவிதங்களைத் தடுப்பதை விட டாஸ்மாக் வருமானத்தைப் பெரிதாகப் பார்க்கும் ஒரு அரசு, இனியொரு முறை தப்பித்தவறி கூட தமிழகத்தை ஆளக் கூடாது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Nainar Nagendran pressmeetnainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran issuenainar nagendran replynainar nagendran campaignnainarbjptasmac sales 518 croretasmac salesNainar NagendranNainar Nagendran speech
ShareTweetSendShare
Previous Post

அசாம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு – கவுகாத்தியில் பகுரும்பா த்வோ கலாச்சார விழாவை கண்டு ரசித்த மோடி!

Next Post

வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த இந்து இளைஞர் கார் ஏற்றி கொலை!

Related News

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு – நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி ?

டி-20 லீக் போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி அல்ல ‘போர்’

நிஜ்ஜார் வழக்கில் கனடாவுடன் சேர்ந்து பணியாற்ற இந்தியா விருப்பம்!

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி

30 ஆண்டுகளாக போராட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

வி.கே.சசிகலா தலைமையில் வரும் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்!

மாநகராட்சியிடமிருந்து 1,400 ஏக்கர் நிலத்தை மீட்க போராடிய விவசாயிகள் கைது!

தனியார் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மாணவர்களின் நிகழ்த்திய முருகர் நாடகம்.. பார்த்து வியந்த பார்வையாளர்கள்!

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில், நாட்டியாஞ்சலி விழா – உள்நாட்டு, வெளிநாட்டு கலைஞர்கள்பங்கேற்பு

காங்கிரஸ் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்து -அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த கட்சி பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து

இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்பம் -வங்கதேசத்தில் வென்ற BNP கட்சி அறிவிப்பு

மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

ஆட்சியில் பங்கு , அதிக சீட்டுகள் – மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் ஆண்டு விழாவில் நடனம் ஆடி அசத்திய பிரபுதேவா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies