ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயம் ஒன்றை பாரீஸில் உள்ள க்ரெவின் மியூஸியம் வெளியிட்டுள்ளது.
இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை ஷாருக் கான் படைத்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள லோகார்னோ திரைப்பட விழாவில், ஷாருக்கானுக்கு பெருமை மிகு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படவுள்ளது.
கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.