தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களுக்கு மேலிட பொறுப்பாளர் மற்றும் மேலிட இணை பொறுப்பாளரை நியமித்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜெ.பி. நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளராக அரவிந்த் மேனனும், மேலிட இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டியும் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில மேலிட பொறுப்பாளராக ராதா மோகன் தாஸ் அகர்வாலும், மேலிட இணை பொறுப்பாளராக விஜய ரகத்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சண்டிகர், அசாம், திரிபுரா, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களுக்கு மேலிட பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அரவிந்த் மேனனுக்கும், மேலிட இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுதாகர் ரெட்டிக்கும், தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.