கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லார் அரசு தோட்டக்கலை பண்ணையில் மங்குஸ்தான் பழ சீசன் துவங்கியது.
பண்ணையில் 202 மரங்கள் உள்ள நிலையில் அதில் 80க்கும் மேற்பட்ட மரங்களில் மங்குஸ்தான் பழங்கள் காய்த்து தொங்குகின்றன.
ஆகஸ்ட் மாதம் வரை மங்குஸ்தான் சீசன் என்பதால் பழங்களை அறுவடை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பண்ணைக்கு நேரடியாக சென்று பொதுமக்கள் பழங்களை வாங்கிச் செல்லலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.