உதகையில் உள்ள கேத்தி பகுதியில் காவல் நிலையத்தின் மீது ராட்சத மரம் முறிந்து விழுந்ததில் முன்பக்க சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் உதகையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கேத்தி பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது ராட்சத மரம் முறிந்து விழுந்ததில் காவல் நிலையத்தின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.