சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இதுவரை 16,000 தொலைதூர விமானிகளுக்கான சான்றிதழ்களை வழங்கியுள்ளது.
இந்தியாவில் ட்ரோன் தொழிலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இதுவரை, 16,000 தொலைதூர விமானிகளுக்கான சான்றிதழ்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வழங்கியுள்ளது என மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹால் எழுத்து மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இந்த சான்றிதழ்களை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட தொலைதூர விமான பயிற்சி நிறுவனங்கள் அமர்த்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 116 அங்கீகரிக்கப்பட்ட இத்தகைய பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் சான்றளிக்கப்பட்ட ஆளில்லா விமான அமைப்பு மாதிரிகளை நாட்டில் 48 ட்ரோன் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், பரிந்துரைக்கப்பட்ட திட்ட வழிகாட்டுதல்களின்படி 23 எம்எஸ்எம்இ-கள் பட்டியலிடப்பட்டன எனத் தெரிவித்தார்.