டெல்லியில் வரும் 28-ம் தேதி வரை மழை தொடரும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி-என்சிஆர் பகுதியில் பலத்த காற்றுடன் தீவிரமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் டெல்லியின் சாந்தி பாதை, நவுரோஜி நகர், பிகாஜி காமா பிளேஸ், மோதி பாக் ரிங் ரோடு உள்ளிட்ட பல சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.