வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெறும் தேதி, போராட்டத்தின் வடிவம் குறித்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை ராமதாஸ் சந்தித்தார். அப்போது பேசிய ராமதாஸ், மின்வாரியத்தில் 3 ஆயிரத்து 420 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது என தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் 2 ஆயிரத்து 400 கோடி கூடுதல் வருவாய் கிடைப்பதாக அரசு கூறும் நிலையில், மின் வாரியம் ஏன் நஷ்டத்தில் உள்ளது என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.