கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கல்வராயன் மலையில் 150 பள்ளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையை பார்த்த நீதிபதி பாலசுப்ரமணியம், மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு பள்ளிகளில் சாதி பெயர் இருக்கலாமா என அரசிடம் கேள்வியெழுப்பினார். மேலும், தெருக்களில் உள்ள சாதி பெயரை நீக்கியது போல அரசு பள்ளிகளிலும் சாதி பெயரை நீக்கிவிடுங்கள் என தெரிவித்தார்.