நீலகிரி பாதாக்கண்டி பகுதியில் ஏற்பட்ட திடீர் மண் சரிவால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் உதகையில் இருந்து எடக்காடு செல்லும் சாலையில், 30 அடி உயரத்தில் இருந்து திடீரென மண் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் 5க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு சாலையில் ஏற்பட்ட மண் சரிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.