சீனாவில் கெய்மி புயல் தாக்கத்தால் சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புஜியான் மாகாணத்தில் 118 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசியது.
இந்த புயலால் 12 நகரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 6 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருவதாக அந்நாட்டு பேரிடர் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.