குமரி மாவட்டம், படந்தாலுமூடு பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட கார் மீது மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஐசாக் மற்றும் அவரது மனைவி மார்த்தாண்டம் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்த போது படந்தாலுமூடு பகுதியில் காரை நிறுத்தியுள்ளனர்.
அப்போது திடீரென கார் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினர். இதையடுத்து பொதுமக்கள் மரத்தை அப்புறப்படுத்தினர்.