பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெறும் இந்திய போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ அட்டவணையின் படி, பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவுப் போட்டி இரவு 7 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் -குவாதமாலா வீரருடன் மோதுகிறார்.
அதே போல் இரவு 8 மணிக்கு மேல் நடைபெறும் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக்ஷெட்டி அணி – பிரான்ஸ் அணியுடன் மோதுகிறது.
இதையடுத்து மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டி இரவு 11.50 மணிக்கு மேல் தொடங்க உள்ளது. இதில் தனிஷா மற்றும் அஸ்வினி பொன்னப்பா அணியினர், தென்கொரிய அணியுடன் மோதுகிறது.
நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் பிரீத்தி பவார் – வியட்நாம் வீராங்கனையான தி கிம் ஆன்வோ உடன் மோதுகிறார்.
இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணியும் – நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
மேலும், பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் 10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் அர்ஜூன் சிங் சீமா மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அதே போல மாலை 4 மணிக்கு நடைபெறும் மகளிர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மானு பாக்கர் மற்றும் ரிதம் சங்வான் பங்கேற்கின்றனர்.
இரவு 7.15 மணிக்கு நடைபெறும் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஹர்மீத் தேசாய் – ஜயித் அபோவுடன் மோதுகிறார்.
இதையடுத்து டென்னிஸ் போட்டியை பொறுத்தவரை இரவு 10.30 மணிக்கு தொடங்கும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் – பிரான்ஸ் வீரர் காரென்டின் உடன் போட்டியிடுகிறார்.
அதே போல மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் ரோஹன் போபண்ணா மற்றும் ஸ்ரீராம் பாலாஜி அணி பிரான்ஸ் வீரர்களான ரிபெளல் ஃபாபியென் மற்றும் ரோஜர் எட்வர்டு உடன் களம் காண்கின்றனர்.