கடலூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் ஈட்டி எறிதல் பயிற்சியின்போது மாணவன் தலையில் ஈட்டி பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடலூரில் செயல்பட்டு வரும் சியோன் உயர் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஈட்டி எறிதல் பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது 10-ம் வகுப்பு மாணவனான கிஷோர் என்பவரின் தலையில் ஈட்டி பாய்ந்து அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் ரத்த வெள்ளத்தில் துடித்தத மாணவனை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.