தமிழ் மொழியை வளர்க்கும் புதிய முயற்சியாக ”யாழ் டிவி” எனும் புதிய டிடிஎச் சேனலை பிரதமர் மோடி ஜூலை 29ம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.
மத்திய கல்வித்துறை சார்பில், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்கும் விதமாக ஸ்வயம் பிரபா என்ற பெயரில் கடந்த 2017ம் ஆண்டு தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டது.
கொரோனா காலத்தின்போது மாணவர்கள் தங்கு தடையினறி கல்வி பயில இந்த சேனல் உதவியாக அமைந்தது.
இந்த வரிசையில் முதல் முறையாக தமிழ் மொழியை வளர்க்கும் முயற்சியாக ”யாழ் டிவி” எனும் பெயரில் புதிய டிடிஎச் சேனல் தொடங்கப்படவுள்ளது
இந்த சேனலுக்கான நிகழ்ச்சியை தயாரிக்கும் பொறுப்பு மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திடன் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை பிரதமர் மோடி ஜூலை 29ம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.
நாள்தோறும் 4 மணி நேரத்திற்கான தமிழ்ப் பாடங்கள் இந்த சேனலில் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும், அதே பாடங்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் மறு ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.