செவ்வாய் கிரகத்தில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்த்திருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி நாசா, பெர்சிவியரன்ஸ் (தமிழில் விடாமுயற்சி) என்ற ரோவர் ஒன்றை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. இந்த ரோவர் தன்னுடன் சோஜனர் (Sojourner) வாய்ப்பு ஸ்பிரிட் மற்றும் க்யூரியாசிட்டி இஞ்ஜெனுட்டி (ingenuity) என்ற சிறிய ஹெலிகாப்டரையும் கொண்டு சென்றது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பியிருந்த ரோவர், கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் 45 கிலோமீட்டர் அகலமுள்ள ஜெஸெரோ பள்ளத்தின் நடுவே தரையிறங்கியது.
அப்போதிலிருந்து, அது தனது மினி ஹெலிகாப்டரை பறக்கவிட்டு, அதன் சுற்றுப்புறங்களைப் பற்றிய பொதுவான தகவல்களைச் சேகரிப்பது என அதன் பரிசோதனை செயல்பாடுகளை செய்துவருகிறது.
ஆனால், செவ்வாய் கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பகுதிக்கு, ஜெஸெரோவின் மேற்கிலுள்ள வண்டல் மேட்டை ஆய்வு செய்யச் செல்வதே ரோவரின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்பதற்கான அடையாளமாக ஒரு பள்ளத்தில் மூடப் பட்டிருந்த பாறையைக் கண்டு பிடித்திருக்கிறது.
அந்த பாறையின் கால்சியம் சல்பேட் போன்ற கனிமங்கள் இருப்பதை ரோவர் கண்டறிந்துளளது. ஆகையால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததற்கான சாத்திய கூறுகள் அதிகம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதாக தாங்கள் கூறவில்லை என்று உறுதியாகக் கூறும் நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவரில் பணிபுரியும் விஞ்ஞானிகள், ரோவர் பூமிக்குத் திரும்பினால் மட்டுமே இது பற்றி முழுவதுமாக ஆய்வு செய்து ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.
டெல்டா என்பது ஒரு பரந்த நீர்நிலைக்குள் நுழையும்போது ஆற்றின் மூலம் கொட்டப்படும் வண்டல மணலில் இருந்து உருவாகும் ஒரு நில அமைப்பாகும். ஆற்றின் நீரோட்டத்தில் வேகம் குறையும் போது, அடித்து வந்த எதையும் ஆறு வெளியே ஒதுக்கி தள்ளிவிடும்.
செவ்வாய் கிரகத்தில் இந்த அகலமான பள்ளமும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏரியாக இருந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது.
செவ்வாய் கிரகத்தின் வாழ்க்கைச் சூழல் குறித்த உண்மைகளை நிறுவுவதில், ரோவரின் பாறை சேகரிப்புகளை பூமிக்குக் கொண்டு வர வேண்டும். அதற்கு கடுமையான ஆய்வுகளை பெரிய ஆய்வகங்களில் செய்யவேண்டும்.
எனவே குறைந்த செலவில் பாறைகளை எப்படி விரைவில் பூமிக்கு கொண்டு வருவது என்பது குறித்து தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற நாசா முடிவு செய்திருக்கிறது.
நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து, ரோவர் சேகரித்த மாதிரிகளை மீட்டெடுக்கத் தேவையான பணிகளைத் திட்டமிட்டு வருகிறது.
அதற்காக முயற்சிகள் 2030-ஆம் ஆண்டின் இறுதியில் மார்ஸ் ராக்கெட் என்ற மற்றொரு ரோவரும் கேரியர் விண்கலத்தையும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது நாசா.