மறைந்த முன்னாள் எம்பி மாஸ்டர் மாதனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆறுதல் கூறினார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியாக இரண்டு முறை பதவி வகித்தவரும், பாஜக மூத்த தலைவருமான மாஸ்டர் மாதன், நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு கோவையில் நேற்று நடைபெற்றன.
இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் மாஸ்டர் மாதனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேசிய வழியில் பயணித்து, எண்ணற்ற இளைஞர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும், அரசியல் வழிகாட்டியாக வாழ்ந்த மாஸ்டர் மாதன், தனது சமூக சேவைகளின் மூலம் என்றும் நம்மோடு நிலைத்திருப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார்.