சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மூதாட்டியை கொன்று உடலை ஆற்றில் வீசிய தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.
மயிலை சிவமூர்த்தி தெருவை சேர்ந்த 78 வயதான மூதாட்டி விஜயா, ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி வேலைக்கு சென்ற விஜயா வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகள் லோகநாயகி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தேகத்தின்பேரில் பக்கத்து வீட்டை சேர்ந்த பார்த்திபன் – சங்கீதா தம்பதியரை விசாரணைக்காக அழைத்தபோது அவர்கள் தலைமறைவாகினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சிசிடிவி உதவியோடு விருதுநகரில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர்.
தம்பதியரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நகைக்காக மூதாட்டியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.