நாடாளுமன்ற நடவடிக்கை மறுஆய்வுக்கு அப்பாற்பட்டது என மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளித்த அவர், நாடாளுமன்ற நடவடிக்கையில் அதன் தலைவர் தவிர வேறு யாரும் குறுக்கிட இயலாது என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்துக்கே அதிகபட்ச அதிகாரம் இருப்பதாகவும், அவை நடவடிக்கைகள் மறுஆய்வுக்கு அப்பாற்பட்டது என்றும் ஜகதீப் தன்கர் குறிப்பிட்டார்.