ஆந்திராவில் மாமியார் வீட்டில் உள்ள மனைவியை பார்க்க அரசுப்பேருந்தை ஓட்டிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
ஆத்மகூறு பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப்பேருந்து திடீரென காணாமல் போனது, இது குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் பேருந்தை போலீசார் தேடி வந்தனர்.
அப்போது முச்சுமரி கிராமத்தில் தர்கையா என்பவர் பேருந்தை ஓட்டிசென்றது தெரியவந்தது. அவரை மடக்கிபிடித்த போலீசார் பேருந்தை மீட்டு அவரை கைது செய்தனர்.