கேரள மாநிலம் வயநாடு பகுதியில் சுற்றித்திரிந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த சோமன் என்பவரை மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தமிழகம், கேரள, கர்நாடக ஆகிய மூன்று மாநில எல்லைப் பகுதிகளை கொண்டது நீலகிரி மாவட்டம். இந்த எல்லைப் பகுதிகளில் அண்மைக்காலமாக மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட் சோமன் என்பவரை கேரள போலீசார் கைது செய்தனர். இவர் மீது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.