பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தடகள வீரர்களை வழிநடத்திச் செல்லும் இந்திய ஒலிம்பிக் சம்மேளன நிர்வாக குழு உறுப்பினர்கள், மத்திய அரசின் உதவித்தொகை தங்களுக்கு வேண்டாமென தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தாங்கள் வலுவான பொருளாதார பின்னணியைக் கொண்டிருப்பதால், இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு 300 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 25 ஆயிரம் ரூபாயும், ஐந்து நாட்கள் பாரீஸில் தங்குவதற்கு தலா ஆயிரம் டாலர், அதாவது சுமார் 90 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.