ரஷ்ய கடற்படை தினத்தில் பங்கேற்ற இந்தியாவின் ஐஎன்எஸ் தபார் கப்பலில் உள்ள கடற்படை வீரர்களுக்கு அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்தார்.
ரஷ்ய கடற்படை தினத்தையொட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள நெவா ஆற்றின் பிரதான கடற்படை அணிவகுப்பை அதிபர் புடின் பார்வையிட்டார். நெவா ஆற்றில் ரஷ்ய கடற்படை கப்பல்கள், பாய்மர கப்பல்கள், நீர்மூழ்கி கப்பகள் அணிவகுத்து சென்றன.
இதில் பங்கேற்ற இந்தியாவின் ஐஎன்எஸ் தபாரில் உள்ள இந்திய கடற்படை வீரர்களுக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்தார்.