நாட்டில் அச்ச உணர்வு நிலவுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ராஜ்நாத் சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட்டில் வரிச்சுமையைக் குறைக்க எந்தவோர் அம்சமும் இடம்பெறவில்லை என விமர்சித்தார்.
தொடர்ந்து சக்கர வியூகத்தில் இந்தியா சிக்கியிருப்பதாக ராகுல் காந்தி கூறியதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எதிர்ப்பு தெரிவித்தார். அவையின் விதிகள் ராகுல் காந்திக்கு தெரியவில்லை என்றும், அவையின் மாண்பை அறிந்து பேச வேண்டும் என்றும் கிரண் ரிஜிஜு அறிவுறுத்தினார்.
பின்னர், அக்னிபத் திட்டத்தைக் கையிலெடுத்த ராகுல் காந்தி, பட்ஜெட்டில் அக்னிபத் திட்ட ஓய்வூதியர்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுத்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உண்மைக்குப் புறம்பான கருத்துகளை ராகுல் காந்தி பரப்புவதாக தெரிவித்தார்.