தஞ்சையில் நியாய விலைக் கடையில் பிளாஸ்டிக் அரிசி கலந்து விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தஞ்சை மாவட்டம், நாகப்ப உடையான்பட்டி கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அதில், “குருங்குளம் கிழக்கு சமத்துவபுரத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடையில் விற்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்து விற்பனை செய்யப்படுகிறது” எனவும், இதில், தொடர்புடயைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.