டெல்லியில் மழை வெள்ள உயிரிழப்புக்கு உள்ளூர் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என மாநிலங்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மைய தரைதளத்தில் மழை வெள்ளம் புகுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், மழைவெள்ளம் பாதிப்புகளை ஆய்வு செய்ய பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பின்னரே, இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.
மேலும், இதுபோன்ற துயர சம்பவம் மீண்டும் நடைபெறாததை உறுதிசெய்வது நமது கடமை என்றும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.