சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை கண்டு வருகிறது.
இந்நிலையில் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 385 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து 89 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 89 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.