ஓபிசி இட ஒதுக்கீடு! - ஆதாரங்களுடன் அண்ணாமலை விளக்கம்!
Jun 24, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓபிசி இட ஒதுக்கீடு! – ஆதாரங்களுடன் அண்ணாமலை விளக்கம்!

Murugesan M by Murugesan M
Jul 30, 2024, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதாகவும், பாஜக ஆட்சியிலேயே இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், திமுக மேற்கொண்ட சமரசமற்ற சட்டப் போராட்டத்தால், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 15 ஆயிரத்து 66 மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மருத்துவ சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீடு 1986-ம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

2008-09-ம் ஆண்டில், அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மத்திய கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அனுமதித்தாலும், மருத்துவ சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மறுத்ததாகவும், அண்ணாமலை கூறியுள்ளார்.

மருத்துவ சேர்க்கைக்கான அகில இந்திய இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கில், 2015-ம் ஆண்டு பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, மாநிலங்களுக்கான இடஒதுக்கீட்டை பயன்படுத்த பரிந்துரைத்ததாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஓபிசி இடஒதுக்கீட்டில் மத்திய அரசின் நிலைப்பாட்டை இது தெளிவாகக் காட்டுவதாகக் கூறியுள்ள அண்ணாமலை, கடந்த 2021-ம் ஆண்டு, மருத்துவ சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் முடிவை பிரதமர் மோடி அறிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிறரின் உழைப்பிற்கு பெயர் வாங்குவது திமுகவிற்கு ஒன்றும் புதிதல்ல என்று விமர்சித்துள்ள அண்ணமாலை, மருத்துவ சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி இடஒதுக்கீட்டின் வரலாற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Tags: OBC reservation! - Annamalai explanation with sources!
ShareTweetSendShare
Previous Post

வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை!

Next Post

ஒரு சவரன் தங்கம் ரூ.51,080-க்கு விற்பனை!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

நிறைமாத கர்ப்பிணியின் இருக்கைக்கு சென்று பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதே இந்தியாவின் நோக்கம் – பிரதமர் மோடி

மும்பையில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எதிர்ப்பை இபிஎஸ் குறைத்தாரா? : கட்சிக்குள் சலசலப்பு!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies