மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் அலைகழிப்பதாக கூறி வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் விவசாயி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கே.வி.குப்பம் அடுத்த பசுமாத்தூரைச் சேர்ந்த விவசாயி பாரதி என்பவர், மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு அளித்தார்.
அதில், “மின் இணைப்பு வேண்டி 11 ஆயிரத்து 420 ரூபாய் கட்டணமாக செலுத்தியும், பல மாதங்கள் ஆகியும் அதிகாரிகள் மின் இணைப்பு வழங்கவில்லை” என்று புகார் தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டார். மேலும், லஞ்சம் கொடுக்கவில்லை என்பதாலே அதிகாரிகள் அலைகழிப்பதாக தெரிவித்தார்.