குற்றாலத்தில் தனியார் அருவிகளுக்கு செல்லும் பாதைகளை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குண்டாறு நீர்த்தேக்கத்தின் மேல் பகுதியில் ஏராளமான தனியார் நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
கடந்த வருடம் குண்டாறு நீர்த்தேக்கத்திற்கு மேல் செல்லும் பாதை மூடப்பட்ட நிலையில், முறையான கண்காணிப்பு இல்லாததால் தனியார் நீர்வீழ்ச்சிகளில் குளித்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். தனியார் அருவிகளுக்கு செல்லும் பாதைகளை நிரந்தரமாக மூடவும் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.