அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை, இந்திய வம்சாவளி பெண் வழிநடத்துவது மகிழ்ச்சியளிப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.
அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டது, அமெரிக்க அரசியலையே மாற்றியமைத்துள்ளதாகவும் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார்.
நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த நினைப்போரின் முயற்சியை கமலா ஹாரிஸால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று தான் நம்புவதாகவும், சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார்.