புதுக்கோட்டையில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், அண்ணா சிலையின் கூண்டு மீது ஏறி அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேத்தான்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவர், மதுபோதையில் அண்ணா சிலையின் கூண்டு மீது ஏறி அமர்ந்து கொண்டு அட்டகாசம் செய்தார்.
தகவலறிந்து சென்ற காவல்துறையினர் கீழே இறங்குமாறு பலமுறை வலியுறுத்தியும், அவர் இறங்க மறுத்து உளறிக் கொண்டிருந்தார். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு காவல்துறையினர் அவரை கீழே இறக்கினர்.