உற்பத்தி மையத்தில் சீனாவை இந்தியா விஞ்ச நினைப்பது துணிச்சலான முடிவு என இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற எல்சியா தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற அவர், உலகின் தொழிற்சாலையாக சீனா ஏற்கெனவே மாறிவிட்டதாவும், பிற நாடுகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள பொருட்களில் 90 சதவீதம், சீனாவில் உற்பத்தியானவைதான் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவை விட ஆறு மடங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியை சீனா கொண்டிருப்பதாக கூறிய அவர், உற்பத்தி மையத்தில் அந்நாட்டை இந்தியா விஞ்ச நினைப்பது துணிகரமான முடிவு என்றும் குறிப்பிட்டார்.