நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்துவரும் கனமழை காரணமாக மாயாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கூடலூரில் பெய்த அதிகனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மேலும், முதுமலை யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளை ஆற்றுக்கு குளிக்க கொண்டு செல்ல வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.