டெல்லியில் ஐஏஎஸ் தேர்வு மையத்தில் மழைவெள்ளம் புகுந்து மாணவர்கள் 3 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில், டெல்லி ஆம் ஆத்மி அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வாயில் துணியைக் கட்டிக்கொண்டு தொண்டர்கள் பங்கேற்றனர்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆம் ஆத்மி அரசு நீதியை நிலைநாட்ட வேண்டுமென பாஜகவினர் வலியுறுத்தினர்.