திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூவில் உள்ள தனியார் குடியிருப்பில் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் வசித்து வருகிறார்.
இவர், நடிகர் கவின் நடித்த லிஃப்ட் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளரான பாலாஜி கபா வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.