கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியிலிருந்து ஹைட்ரோ குளோரிக் அமிலம் கசிந்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
புதுச்சேரியில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி தண்ணீர் சுத்திகரிப்பதற்கான, ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை ஏற்றுக்கொண்டு சென்ற டேங்கர் லாரி, விருதாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் பல மணி நேரமாக லாரியை அப்புறப்படுத்தாததால் லாரியில் இருந்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் கசிந்தது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுகளுக்கும், பொதுமக்களுக்கும் மூச்சுத் திண்றல் ஏற்பட்டது.