இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்க்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர் தேர்வு செய்வதற்காக அறிவிப்பு வெளியானது. தற்போது பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்க்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலிருந்து செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.