மார்வெல் ஸ்டூடியோ தயாரிப்பில் வெளியான டெட்பூல் & வால்வரின் திரைப்படம் உலகளவில் இதுவரை 3 ஆயிரத்து 650 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Shawn Levy இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் கடந்த 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் வெளியான நான்கு நாட்களில் 83 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது.