ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.சி. புக் வழங்க லஞ்சம் வாங்கிய போக்குவரத்து அலுவலர்கள் 3 பேரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
கீழக்கரை தட்டான் தோப்பு தெருவை சேர்ந்த ரகு, தான் வாங்கிய புதிய காருக்கு ஆர்.சி. புக் கேட்டபோது அதனை வழங்க கார் நிறுவன மேலாளர் முருகேசன் மற்றும் ஆர்.டி.ஓ அலுவலர்கள் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து ரகு புகாரளித்ததையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முருகேசனிடம் கொடுக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்பேரில் ரகுவிடம் இருந்து முருகேசன் லஞ்சம் பெற்றபோது அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மேலும் போக்குவரத்து அலுவலர்கள் செய்யது, நசீர் ஆகியோரையும் கைது செய்தனர்.