கன்னியாகுமரியில் ஹோட்டல்களில் உணவு பாதுகப்புதுறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஏராளமான உணவகங்கள், சுற்றுலா பயணிகளுக்கு கெட்டுப்போன உணவுகளை வழங்குவதாக புகார் எழுந்தது.
இதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 5 ஹோட்டல்களில் சோதனை நடத்தினர். அப்போது சமைத்து பயன்படுத்தாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த சிக்கன், மட்டன், நண்டு உள்ளிட்ட 150 கிலோ உணவுகளை கைப்பற்றி அழித்தனர். மேலும், கெட்டுப்போன உணவுகளை வழங்கிய ஹோட்டல்களுக்கு அபராதமும் விதித்தனர்.